தனியுரிமை கொள்கை
yaseennikah.com ஒரு ஆன்லைன் திருமண தகவல் சேவை மையம் ஆகும். தமிழகத்தை சேர்ந்த தமிழ் மற்றும் உருது முஸ்லிம்களுக்கு ஆன்லைன் மூலமாக திருமண தகவல் சேவை அளிக்கிறோம். இந்த தனியுரிமை அறிக்கை என்பது இந்த தளத்தில் பதிவுசெய்த அனைத்து பயனாளர்களுக்கும் பொதுவானது. இங்கே பதிவுசெய்ய எவ்வித கட்டணங்களும் கிடையாது.
உங்களை பற்றிய தகவல்களை நீங்களாகவோ அல்லது எங்கள் மூலமாகவே (தொலைபேசி மற்றும் வாட்ஸப்) பதிவுசெய்ய இயலும். நீங்களாக பதிவு செய்திருந்தால் தொலைபேசி வாயிலாக உங்களது விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே உங்களது சுயவிவரம் திரையிடப்படும். உங்களது சுயவிவரத்தை நீங்கள் பதிவுசெய்வதற்கு நீங்களாகவோ அல்லது உங்களது குடும்ப உருப்பினராகவோ அல்லது நெருங்கிய உறவினராகவோ இருத்தல் அவசியம். நட்பின் அடிப்படையில் எவருக்கும் பதிவுசெய்யவோ, அல்லது முஸ்லிம் அல்லாத பிறமதத்தினருக்கு பதிவுசெய்யவோ கண்டிப்பாக அனுமதி இல்லை. உண்மையான தகவல்களை மட்டுமே இங்கே பதிவிட வேண்டும். இங்கே பதிவிடும் தகவல்களுக்கு நீங்களே முழுப்பொறுப்பு ஆவீர்கள். நீங்கள் பதிவிட்ட தகவல்கள் ஏதேனும் போலியானவை என தெரியவந்தால் உங்களது கணக்கு முடக்கப்படும்.
உங்களுடைய சுயவிவரத்தை பதிவு செய்தால் மட்டுமே உங்களால் தளத்தில் உள்நுழைய இயலும். நீங்கள் பதிவிடும் அனைத்து தகவல்களும் மற்ற பயனாளர்களால் காண இயலும். மணமகளின் புகைப்படத்தை மட்டும் (கூடுதலாக கட்டணம் செலுத்தி) மறைத்து வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும். மற்ற பயனாளர்களின் விருப்பங்கள் குறுஞ்செய்தி வாயிலாக உங்களுக்கு தெரிவிக்கப்படும். உங்களை விரும்பிய பயனாளர்கள் நேரடியாகவும் (தொலைபேசி & வாட்ஸப்) உங்களை தொடர்புகொள்ள இயலும்.
உங்களது சுயவிவரத்தை நீங்களாகவோ அல்லது எங்களிடம் தொலைபேசி அல்லது வாட்ஸப் மூலமாகவோ கூறி நீக்கிவிட இயலும். நீக்கப்பட்ட தகவல்கள் யாருடனும் பகிரப்பட மாட்டாது. சுயவிவரத்தை நீக்குவதற்கு பதிவுசெய்த தேதியிலிருந்து குறைந்தபட்சம் ஒரு மாதம் பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
நிர்வாக வசதிக்காக உங்களால் நீக்கப்பட்ட தகவல்கள் மற்றும் உங்களுடைய IP முகவரி சேமிக்கப்படும்.
எப்பொழுது வேண்டுமாலும் தேவைக்கேற்றவாறு எங்களுடைய தனியுரிமை கொள்கை மாற்றியமைக்கப்படும்.
சேவையும் ஆதரவும் ஆன்லைன் மூலமாக மட்டுமே வழங்கப்படும். எங்களது சேவையை தவறாக பயன்படுத்த முயற்சித்தாலோ அல்லது மற்ற பயனாளர்கள் உங்களை பற்றி முறையிட்டாலோ உங்களது கணக்கு முடக்கப்படும். எனவே கண்ணியமாக நடந்துகொள்ளும்படி பயனர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஏழைப் பெண்களுக்கும் ஊனமுற்ற ஆண்களுக்கும் 25% சதவீத கட்டண சலுகையும், ஊனமுற்ற பெண்களுக்கு 50% கட்டண சலுகையும் வழங்கப்படும்.